Home One Line P1 “அமைச்சரவையில் காலியிடங்கள் இல்லையென்றால் எனக்கென்ன, நான் கேட்கவில்லையே!”- அன்வார் இப்ராகிம்

“அமைச்சரவையில் காலியிடங்கள் இல்லையென்றால் எனக்கென்ன, நான் கேட்கவில்லையே!”- அன்வார் இப்ராகிம்

1252
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அமைச்சரவையில் அன்வாருக்கு இடமில்லை என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறியதைத் தொடர்ந்து, பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று வெள்ளிக்கிழமை தாம் ஒருபோதும் அமைச்சராக வர வேண்டும் என்று தம்மை தாமே முன்மொழிந்துக் கொண்டதில்லை என்று கூறினார்.

“தற்போதைய அமைச்சரவையை வழிநடத்த மகாதீருக்கு முழு இடத்தையும் கொடுக்க வேண்டும் என்று நான் நம்பிக்கைக் கூட்டணியின் ஒருமித்த கருத்துடன் பிணைக்கப்பட்டுள்ளேன்” என்று அன்வார் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

இதனிடையே, நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பெர்சாத்துக் கட்சியின் உச்சமட்டக் கூட்டத்தில் அரசாங்கத்தில் அமைச்சரவை மறுசீரமைப்பு குறித்து விவாதிக்கப்படவில்லை என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

டாக்டர் மகாதீர் மற்றும் பிகேஆர் கட்சியின் தலைவர் அன்வார் இப்ராகிமின் கூட்டணி இணக்கமானதாகக் கூறப்படுவதால், அமைச்சரவையில் அவர் சேருவதற்கு அழைப்பு விடுக்கப்படுமா என்று கேட்டதற்கு, தற்போது அமைச்சரவையில் காலியிடங்கள் இல்லை என்று பிரதமர் கூறியுள்ளார்.

நாங்கள் எங்கள் கட்சியில் கூட்டத்தில் இந்த விசயத்தைப் பற்றி விவாதிக்கவில்லை. அரசாங்கம் எந்த மாற்றங்களையும் செய்யாது அல்லது அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்காது. யாரும் தங்களின் பதவி விலகலை தெரிவிக்கவில்லை. தற்போதைக்கு காலியிடமும் இல்லை. காலியிடம் இருந்தால், சரியான வேட்பாளர்களை நாங்கள் பரிசீலிப்போம், ”என்று டாக்டர் மகாதீர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

இருப்பினும், சில அமைச்சர்களின் இலாகாக்களை மாற்றுவது தொடர்பான விவாதங்கள் மட்டுமே உள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.