Home One Line P2 பிக் பாஸ் 3 : இந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை

பிக் பாஸ் 3 : இந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை

1894
0
SHARE
Ad

சென்னை – நேற்று ஞாயிற்றுக்கிழமை ஸ்டார் விஜய் தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளியேறிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் இந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை. இந்தத் தகவலைக் கடந்த வாரமே கமல்ஹாசன் அறிவித்துவிட்டார்.

“இந்த வாரம் இரசிகர்கள் யாரும் வாக்களிக்க வேண்டியதில்லை. காரணம், யாரையும் நாங்கள் வெளியேற்றப் போவதில்லை. ஆனால் அது பிக்பாஸ் வீட்டினுள் இருப்பவர்களுக்குத் தெரியாது” என கடந்த வார நிகழ்ச்சியில் கமல் அறிவித்திருந்தார்.

இருந்தாலும், பிக்பாஸ் வீட்டில் இருந்தவர்கள் நால்வரை இந்த வாரம் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட பரிந்துரை செய்திருந்தனர்.

#TamilSchoolmychoice

கவின், முகேன், வனிதா விஜயகுமார், ஷெரின் ஆகியோரே அந்த நால்வராவர். இந்த நால்வரில் யார் வெளியேறுவார்கள் என்ற விவாதம் பங்கேற்பாளர்களிடையே தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இறுதியில் நிகழ்ச்சியை முடிக்கும்போது இந்த வாரம் யாரும் வெளியேறப் போவதில்லை என்று கூறி கடந்த வாரம் தான் மேடையில் விடுத்த அறிவிப்பை அனைவருக்கும் – பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கும் – குறும்படமாக கமல் போட்டுக் காட்டினார்.