Home One Line P1 நிபோங் திபால் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழ்ப் பள்ளிகளுக்கு யுபிஎஸ்ஆர் பயிற்சி நூல்களை வழங்கினார்

நிபோங் திபால் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழ்ப் பள்ளிகளுக்கு யுபிஎஸ்ஆர் பயிற்சி நூல்களை வழங்கினார்

828
0
SHARE
Ad

நிபோங் திபால் – பினாங்கு மாநிலத்திலுள்ள நிபோங் திபால் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினரான டத்தோ டாக்டர் மன்சோர் பின் ஹாஜி ஒத்மான், தனது தொகுதியின் கீழ் வரும் 8 தமிழ்ப் பள்ளிகளில், இந்த ஆண்டு யுபிஎஸ்ஆர் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் யுபிஎஸ்ஆர் தேர்வு வழிகாட்டி பயிற்சிப் புத்தகங்களை இலவசமாக வழங்கியுள்ளார்.

யுபிஎஸ்ஆர் தேர்வுக்கான ஐந்து பாடங்களான மலாய் மொழி, ஆங்கிலம், தமிழ், கணிதம், அறிவியல் ஆகிய ஐந்து பாடங்களுக்குமான இந்த பயிற்சி நூல்களை வி ஷைன் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டிருக்கிறது.

நாளை புதன்கிழமை யுபிஎஸ்ஆர் தேர்வுகள் தொடங்கவிருக்கும் நிலையில் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் சிறந்த முறையில் இந்தத் தேர்வுகளில் வெற்றி பெற உதவும் பொருட்டு நாடாளுமன்ற உறுப்பினர் மன்சோர் ஹாஜி ஒத்மான் இந்த நூல்களை சில வாரங்களுக்கு முன்பே தமிழ்ப் பள்ளிகளுக்கு வழங்கி விட்டார்.

#TamilSchoolmychoice

மன்சோர் ஹாஜி ஒத்மானின் நாடாளுமன்ற சேவை அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் சில வாரங்களுக்கு முன்பே நிபோங் திபால் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 8 தமிழ்ப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்களிடமும் இந்த நூல்களை வழங்கினர்.

அவ்வாறு யுபிஎஸ்ஆர் பயிற்சி நூல்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட சில படக் காட்சிகளை இங்கே காணலாம்.