Home One Line P1 “அரசியலுக்காக உணர்ச்சியைத் தூண்ட வேண்டாம் – எல்லை மீறாதீர்கள்” மாமன்னர் நினைவுறுத்து

“அரசியலுக்காக உணர்ச்சியைத் தூண்ட வேண்டாம் – எல்லை மீறாதீர்கள்” மாமன்னர் நினைவுறுத்து

555
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நேற்று திங்கட்கிழமை மாமன்னராக தனது முதல் பிறந்த நாளை அதிகாரபூர்வமாகக் கொண்டாடிய அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல் முஸ்தாபா பில்லா ஷா தாங்கள் சார்ந்திருக்கும் அரசியல் கட்சிகளுக்காக உணர்ச்சிகளைத் தூண்டும் விவகாரங்களைக் கிளறவேண்டாம் எனவும் எல்லை மீறி செயல்பட வேண்டாம் எனவும் அனைத்து மலேசியர்களுக்கும் நினைவுறுத்தினார்.

மாமன்னரின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்ததோடு, பல்வேறு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மாமன்னர் அரண்மனையில் நடைபெற்ற தேநீர் விருந்துபசரிப்பில் பிரதமர் துன் மகாதீரும் அன்வார் இப்ராகிம் தம்பதியரும் மற்ற முக்கியப் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

மாமன்னர் அளித்த தேநீர் விருந்தில் மகாதீர் – அன்வார்

நாட்டின் பலதரப்பட்ட பிரமுகர்களுக்கு மாமன்னர் பிறந்த நாளை முன்னிட்டு விருதுகளையும் வழங்கினார்.

#TamilSchoolmychoice

“ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமைகளும் சுதந்திரமும் நாட்டின் அமைப்பு சாசன விதிகளின்படி வரையறுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த சுதந்திரம் தேசிய ஒற்றுமைக்கான அடிப்படை மதிப்பீடுகளை மீறி செயல்பட அனுமதிக்க முடியாது. எனவே அரசியலிலும் ஓர் எல்லைக் கோடு இருக்க வேண்டும். அந்த எல்லை மீறப்படக் கூடாது” என்றும் மாமன்னர் தனது பிறந்த நாள் செய்தியில் கூறினார்.

அரசியல்மயமான தீவிரக் கருத்துகள் நீட்டிக்க நாம் அனுமதித்தால், என்றாவது ஒருநாள் அதனால் மக்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் மாமன்னர் எச்சரித்தார்.

மாமன்னரின் தேநீர் விருந்தில் அன்வார் தம்பதியர்

“எனது அறிவுரை என்னவென்றால், நடந்தது நடந்தவையாக இருக்கட்டும். கடந்த கால மோதல்களை மறந்து விடுவோம். அப்போதுதான் உடைந்து போன உறவுகளை மீண்டும் இணைக்க முடியும்” என்றும் மாமன்னர் தெரிவித்தார்.

முதல் கட்டமாக 42 பேருக்கு மாமன்னர் உயரிய விருதுகளை வழங்கினார். நாட்டின் தலைமை நீதிபதி தெங்கு மைமுன்  துவான் மாட் அவர்களில் முதன்மையான டான்ஸ்ரீ விருதைப் பெறும் பிரமுகராவார்.

அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமசுக்கும் டான்ஸ்ரீ விருது வழங்கப்பட்டிருக்கிறது.