Home One Line P1 21 ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் மூடப்படும் எனும் செய்தியில் உண்மையில்லை!- மஸ்லீ மாலிக்

21 ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் மூடப்படும் எனும் செய்தியில் உண்மையில்லை!- மஸ்லீ மாலிக்

756
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அடுத்த ஆண்டு தொடங்கி 21 ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் (ஐபிஜி)  மூடப்படும் என்று கூறும் ஊடக அறிக்கை பொய்யானது என்று கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் தெரிவித்துள்ளார். இம்முடிவானது, முந்தைய அரசாங்கத்தின் முடிவைக் குறிக்கிறது என்று அவர் கூறினார்.

ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளை மூடுவது என்பது முற்றிலும் பொருத்தமற்றது என்றும் தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அது குறிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

எந்தவொரு பொய்யான அறிக்கையையும் வெளியிடுவதற்கு முன்னர் எங்களுடன் கலந்தாலோசிக்க பொறுப்பான தரப்பிடம் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இந்த அறிக்கை முந்தைய நிருவாகத்தின் கொள்கையை குறிக்கிறது, தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை அல்ல இது,” என்று அவர் இன்று செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.

#TamilSchoolmychoice

பெயரிடப்படாத ஓர் ஆதாரத்தை மேற்கோள் காட்டி நாளிதழ் ஒன்று மேற்கோள் காட்டி, 27 ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் 21  மூடுவதற்கான திட்டம் உள்ளது என்றும், இது அடுத்த ஆண்டு தொடங்கி செயல்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தது.