கோலாலம்பூர்: பிரிட்டன் இளவரசர் எட்வர்டை மாமன்னர் சுல்தான் அப்துல்லா நேற்று செவ்வாய்க்கிழமை இஸ்தானா நெகாராவில் வரவேற்றார். உடன் இராணியார் தெங்கு ஹாஜா அசிசா அமினா மைமுனாவின் இஸ்காண்டாரியாவும் கலந்து கொண்டார்.
மலேசியாவிற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை இளவரசர் மேற்கொண்டுள்ளார்.
கடந்த ஜனவரிமாதம் மாமன்னராக பதவியேற்ற பிறகு பிரிட்டன் அரச குடும்ப உறுப்பினர்களை முதல் முறையாக சுல்தான் அப்துல்லா சந்தித்துள்ளார்.
ஆசிய பசிபிக் பகுதிக்கான டியூக் ஆஃப் எடின்பர்க் அனைத்துலக விருது மாநாட்டில் கலந்துக் கொள்ளவும் இளவரசர் மலேசியாவிற்கு வருகைப் புரிந்துள்ளார். முறைசாரா கல்வியின் மதிப்பு குறித்து விவாதிக்க ஒரு வட்ட மேசை உரையாடலில் கலந்து கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.
2022-ஆம் ஆண்டு பர்மிங்காமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகளுக்கு முன்னதாக மலேசிய விளையாட்டு வீரர்கள் போட்டியிடுவதைக் காண இளவரசர் எட்வர்ட் அழைத்து வரப்படுவார்.