Home One Line P2 துப்பறிவாளன் 2: இசைஞானியின் இசையில் முதல் முறையாக விஷால், நெகிழ்ச்சியுடன் டுவிட்டரில் பதிவு!

துப்பறிவாளன் 2: இசைஞானியின் இசையில் முதல் முறையாக விஷால், நெகிழ்ச்சியுடன் டுவிட்டரில் பதிவு!

1015
0
SHARE
Ad

சென்னை: கடந்த 2017-ஆம் ஆண்டு இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான படம் ‘துப்பறிவாளன்‘.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைபாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. இப்படத்தின் முதல் பாகம் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுதுப்பறிவாளன் படத்தில் விஷால்ஆண்ட்ரியாபிரன்னாவினய்அனு இம்மானுவேல்பாக்கியராஜ்ஜான் விஜய் இன்னும் பலர் நடித்தனர்

இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படுவதாக நடிகர் பிரசன்னா அண்மையில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உறுதிபடுத்தியயிருந்தார். இதனை மேலும், உறுதிபடுத்தும் வகையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் இப்படம் குறித்த புதிய தகவலைப் பதிவிட்டிருந்தார்.

#TamilSchoolmychoice

அதாவது, தமது 15 ஆண்டு திரைப்படம் வாழ்க்கையில், முதல் முறையாக இசைஞானி இளையராஜா தமது படத்திற்கு இசையமைக்க உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். தமது திரையுலக பயணம் முழுமை அடைந்த ஒரு அனுபவத்தை தாம் பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.