கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், விழி வெண்படல அழற்சி காரணமாக நோய் விடுப்பு சான்றிதழைப் பெற்றதைத் தொடர்ந்து, 1எம்டிபி வழக்கு விசாரணை அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை மீண்டும் தொடங்கும் என்று நீதிபதி கொலின் லாரன்ஸ் செக்வெரா அறிவித்தார். இரண்டு நாட்களுக்கு நஜிப் விடுப்புக் கோரியுள்ளார்.
இந்த விவகாரம் துணை அரசு வழக்கறிஞர் அகமட் அக்ராம் காரிப் மற்றும் நஜிப்பின் வழக்கறிஞர் முகமட் ஷாபி அப்துல்லாவின் குறுஞ்செய்தி மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.
“இன்று வழக்கு விசாரணை இல்லை. எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது. நீதிபதி கொலின் லாரன்ஸ் செக்வெரா அடுத்த செவ்வாய்க்கிழமை விசாரணையை நிர்ணயித்துள்ளார்,” என்று அவர் கூறினார்.
நஜிப்புக்கு விழி வெண்படல அழற்றி ஏற்பட்டுள்ளதால் அவர் நேற்று புதன்கிழமை பத்திரிகையாளர்களை சந்திக்க இயலவில்லை என்று ஷாபி தெரிவித்தார். முன்னதாக எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் விசாரணையின் போது பல நாட்கள் இந்த நோய் காரணமாக வழக்கு விசாரணை ஒத்தி வைகப்பட்டது.