கோலாலம்பூர்: பினாங்கு நகரில் சீன நாட்டினருக்கு மைகாட் விற்பனை குறித்து போதுமான ஆதாரங்களும் தகவல்களும் இருப்பின், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) அது குறித்து வழக்கு விசாரணை நடத்தும் என்று அதன் தலைவர் லத்தீஃபா கோயா தெரிவித்தார்.
இதுவரையிலும் இது குறித்து முறையான புகார்கள் அல்லது அறிக்கைகள் எதுவும் வரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
“எங்களுக்கு முறையான புகார்கள் எதுவும் கிடைக்கவில்லை. எனவே நாங்கள் அதை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம், அக்குழு உண்மையாக இருந்தால் நாங்கள் விசாரணைகளைத் தொடங்குவோம், ஏனெனில் அடையாள அட்டைகளை விற்பனை செய்வது அல்லது தவறான அடையாள அட்டை வழங்குவது தொடர்பான வழக்கு புதிய விவகாரம் அல்ல.
“இதுவரை, நாங்கள் நேரடியாக தகவல்களைப் பெறவில்லை. செய்தி அறிக்கைகள் மூலமாக மட்டுமே நாங்கள் அந்த தகவல்களைப் பெறுகிறோம்,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். எவ்வாறாயினும், எம்ஏசிசி உத்தியோகபூர்வ தகவல்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு விசாரணையை நகர்த்த வேண்டிய அவசியமில்லை என்றும் லத்தீஃபா கூறினார்.
“எங்களுக்கு தெளிவான தகவல்கள் கிடைத்தால் (ஒரு வழக்கைப் பற்றி) நாங்கள் தொடர்ந்து புகார் இல்லாமல் விசாரிப்போம். ஆனால், இன்று வரை இந்த வழக்கு குறித்து எங்களுக்கு தெளிவான தகவல்கள் எதுவும் இல்லை” என்று அவர் கூறினார்.
கடந்த வாரம் ஒரு சிறப்பு நடவடிக்கையின் போது, புத்ராஜெயா உட்பட பினாங்கில் உள்ள ஒரு அரசுத் துறையின் பல ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறி 2012-ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டத்தின் (சொஸ்மா) கீழ் கைது செய்யப்பட்டனர்.