Home One Line P1 புகை மூட்டம்: கிள்ளானில் 3 பள்ளிகள் மூடப்பட்டன!

புகை மூட்டம்: கிள்ளானில் 3 பள்ளிகள் மூடப்பட்டன!

813
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று வியாழக்கிழமை காலை கிள்ளான் பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட காற்று மாசுபாடு குறியீட்டு (ஏபிஐ) பதிவானதால், அப்பகுதியில் உள்ள மூன்று பள்ளிகள் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளன. ஜோஹான் செத்தியாவில் உள்ள மொத்தம் மூன்று பள்ளிகள் உடனடியாக மூட உத்தரவிடப்பட்டன.

ஜோஹான் செத்தியா தேசிய பள்ளி, ஜாலான் கெபூன் தேசியப் பள்ளி, மற்றும் ஜாலான் கெபூன் இடை நிலைப்பள்ளி ஆகியவை சம்பந்தப்பட்ட பள்ளிகள் என்று சிலாங்கூர் மாநில கல்வித் துறை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அம்மாநிலத்தில் 200-க்கும் மேற்பட்ட ஏபிஐ வாசிப்புகளை எட்டிய எந்தவொரு பள்ளியும், நிலைமை மீண்டும் சரியாகும் வரை உடனடியாக பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

பள்ளியை மூடுவது பொதுத் தேர்வுகள் உட்பட அனைத்து வகையான தேர்வுகளின் செயல்திறனைப் பாதிக்காது. அவை திட்டமிட்டபடி தொடரும். சம்பந்தப்பட்ட அனைத்து பள்ளிகளும் கல்வி அமைச்சின் கடிதத்தை குறிப்பிடவும், கடிதத்தில் உள்ள அறிக்கைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்படுகின்றன,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சிலாங்கூர் கல்வி துணை இயக்குநர் முகமட் ராட்ஸி அப்துல்லாவை பெர்னாமா தொடர்பு கொண்டபோது, ​​மூன்று பள்ளிகளையும் மூடுவது தற்போதைய ஏபிஐ வாசிப்பைப் பொறுத்தது என்று அவர் கூறினார்.

இன்று காலை 9 மணி நிலவரப்படி சுற்றுச்சூழல் துறையின் வலைத்தளத்தின்படி, ஜொஹான் செத்தியாவில் ஏபிஐ அளவீடு 213, ஷா அலாம் (133), கிள்ளான் (136), பந்திங் (124), பெட்டாலிங் ஜெயா (126) மற்றும் கோலா சிலாங்கூர் (140) என்று பதிவாகி உள்ளது.