Home One Line P1 புகை மூட்டம்: மலேசியா இந்தோனிசியாவை குறைக் கூறவில்லை, உதவ முற்படுகிறது!

புகை மூட்டம்: மலேசியா இந்தோனிசியாவை குறைக் கூறவில்லை, உதவ முற்படுகிறது!

1218
0
SHARE
Ad
படம்: நன்றி டி ஸ்டார்

கோலாலம்பூர்: இந்தோனிசியாவின் சில பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத் தீயைக் கையாள்வதில் மலேசியா இந்தோனிசியா தரப்பு மீது குற்றம் சாட்டவில்லை என்றும், மாறாக அதனைக் கட்டுப்படுத்த உதவ முற்படுவதாக இந்தோனிசியாவிற்கான மலேசிய தூதர் சைனால் அபிடின் பாகார் தெரிவித்தார்.

இந்தஉதவிகுறித்துமலேசியஅரசாங்கத்தின்எரிசக்தி, தொழில்நுட்பம், அறிவியல், பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் இயோ பீ யின் மூலம் அதிகாரப்பூர்வ கடிதம் இந்தோனிசிய அரசாங்கத்திற்கு சமீபத்தில் அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

எதிர்ப்புக் கடிதம் எதுவும் இல்லை, ஆனால் இந்தோனிசியாவில் காட்டுத் தீ மற்றும் விவசாய பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் தீயை நிறுத்தக் கோரும் உதவிக் கடிதமே” என்று நேற்று புதன்கிழமை அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இந்தோனிசியாவின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் சித்தி நுர்பாயா பாகார், மலேசியாவில் காற்று மாசுபாடு ஏற்படுவதற்கு இந்தோனிசியாதான் காரணம் என்று மலேசியா குற்றம் சாட்டி கடிதம் அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்த விவகாரம் குறித்து விளக்கம் கோரி சைனால் அபிடினுக்கு சித்தி நூர்பாயா  கடிதம் ஒன்று எழுத உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தோனிசிய வானிலை, பருவநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் (பிஎம்கேஜி) அளித்த அறிக்கையின்படி, கலிமந்தானில் ஏற்பட்ட தீயிலிருந்து எழுந்த புகை மூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஒரு மணி நேரத்திற்கு மலேசியாவில் (சரவாக்) காணப் பெற்றதாக குறிப்பிட்டிருந்ததை சித்தி நுர்பாயா அக்கடிதத்தில் பதிவிட்டிருந்தார்.