பிரிட்டன்: நேற்று புதன்கிழமை பிரிட்டன் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட புதிய விதிகளின் கீழ் பட்டம் பெற்ற பின்னர் அனைத்துலக மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் வரை வேலை தேடுவதற்காக பிரிட்டனில் தங்க முடியும்.
முன்னாள் பிரதமர் தெரேசா மே உள்துறை அமைச்சராக இருந்தபோது அறிமுகப்படுத்திய தற்போதைய விதிகளின் கீழ், மாணவர்கள் பட்டப்படிப்பை முடித்த நான்கு மாதங்கள் மட்டுமே தங்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
“அனைத்துலக மாணவர்கள் கலாச்சார மற்றும் பொருளாதார ரீதியில் நம் நாட்டிற்கும் பல்கலைக்கழகங்களுக்கும் முக்கிய பங்களிப்பை வழங்குகிறார்கள். அவர்களின் இருப்பு பிரிட்டனுக்கு நன்மை அளிக்கிறது ”என்று கல்விச் செயலாளர் காவின் வில்லியம்சன் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“எங்கள் பல்கலைக்கழகங்கள் திறந்த உலகளாவிய நிறுவனங்களாக வளர்கின்றன. பட்டதாரி வழியை அறிமுகப்படுத்துவது நமது மதிப்புமிக்க உயர்கல்வித் துறை உலகெங்கிலும் உள்ள சிறந்த திறமைகளை உலக பிரிட்டனுக்கு தொடர்ந்து ஈர்க்கும் என்பதை உறுதி செய்கிறது.” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
பிரிட்டனில் ஆண்டுக்கு சுமார் 450,000 அனைத்துலக மாணவர்கள் படிக்கின்றனர்.