Home One Line P1 சீன நாட்டினரை மலேசியாவில் வீடு வாங்குவதை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் திட்டம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது!- சுரைடா

சீன நாட்டினரை மலேசியாவில் வீடு வாங்குவதை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் திட்டம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது!- சுரைடா

750
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 1 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேற்பட்ட விலையுயர்ந்த ஆடம்பர வீடுகளை வாங்கும் பிரச்சனைக்கு தீர்வு காண அரசாங்கம் தற்போது பல திட்டங்களை பரிசீலித்து வருவதாக வீட்டுவசதி மற்றும் ஊராட்சிமன்ற அமைச்சர் சுரைடா காமாருடின் கூறினார்.

மலேசிய வீட்டு மனை மற்றும் வீட்டுவசதி உருவாக்குநர்கள் (ரெஹ்தா) சங்கத்தின் பதிவுகளின்படி, விற்பனை செய்யப்படாத ஆடம்பர வகை வீடுகளின் அல்லது சொத்துக்களின் மதிப்பு மொத்தம் 100 பில்லியனாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த சிக்கலை தீர்க்க, மலேசியா மை செகண்ட் ஹோம் (எம்எம்2எச்) திட்டத்தின் மூலம், வீட்டு அடிப்படையிலான பிரச்சாரத்தை அரசாங்கம் முன்மொழிந்தது. ஆனால் நான் நேற்று குறிப்பிட்ட வீட்டு உரிமையாளர் பிரச்சாரம் (எச்ஓசி) குழப்பத்தை ஏற்படுத்திவிட்டதுஎன்று அவர் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

உள்ளூர் சொத்து சந்தையில் சீனர்கள் முதலீடு செய்வதை ஈர்ப்பதற்காகசீனா அல்லது ஹாங்காங்கில் வீட்டு உரிமையாளர் பிரச்சாரத்தை (ஹவுஸ் ஓனர்ஷிப் கெம்பெயின்எச்ஒசி) ஏற்பாடு செய்வதை புத்ராஜெயா ஆராய்ந்து வருவதாக சுரைடா தெரிவித்திருந்தார்.

இந்த பிரச்சாரம் சொகுசு வீடுகளுக்கு மட்டுமே என்றும் கூறினார். இம்முறையானது மலிவானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சுரைடாவின் இந்த அறிவிப்புக்கு பிறகு அவரை பதவி விலகுமாறு பல்வேறு தரப்புகள் கூறிவருகின்றனர்.