கோலாலம்பூர்: எதிர்காலத்தில் மக்களால் நிராகரிக்கப்படுவதைத் தவிர்க்க அம்னோவிடம் இருந்து கற்றுக் கொள்ளுமாறு பெர்சாத்து கட்சித் தலைவர் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று வியாழக்கிழமை கட்சி உறுப்பினர்களுக்கு நினைவூட்டினார்.
நாட்டை வழிநடத்த தொலைநோக்குடைய ஒரு கட்சியாக இருப்பதற்கு, கடந்த கால அரசாங்கத்தின் (அம்னோ) வீழ்ச்சிக்கு வழிவகுத்த காரணங்களை கவனிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
அதே நேரத்தில், அம்னோமற்றும் தேசிய முன்னணி பலவீனமாக இருந்ததால்தான், பெர்சாத்து அவர்களை வெல்ல முடிந்ததை அவர் சுட்டிக் காட்டினார்.
“நாம் (பெர்சாத்து) புதிய கட்சியாக இருந்தாலும், பழமையான அக்கட்சியை தோற்கடிக்க முடிந்தது. நமது வெற்றியானது நம் பலத்தால், மக்கள் ஆதரவின் காரணமாக கிடைத்தது மட்டுமல்ல, நாட்டை விடுவிக்க மக்களால் எதிர்க்கட்சி (அம்னோ) நிராகரிக்கப்பட்டதும் ஒரு காரணம். அக்கட்சியின் தலைவிதி நமக்கு பாடம் கற்பிக்கக்கூடிய ஒன்று” என்று அவர் கூறினார்.