Home One Line P1 மாமன்னர் தம்பதிகளை டுவிட்டரில் அவமதித்ததாக காவல் துறையில் புகார்!

மாமன்னர் தம்பதிகளை டுவிட்டரில் அவமதித்ததாக காவல் துறையில் புகார்!

670
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மாமன்னர் சுல்தான் அப்துல்லா மற்றும் பேரரசியார் தெங்கு ஹஜா அசிசா அமினா மைமுனா இஸ்காண்டாரியாவை டுவிட்டரில் அவமதித்ததுத் தொடர்பாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு வியாழக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில், புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குனர் ஹுசிர் முகமட் கூறுகையில், 1948-ஆம் ஆண்டு தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தெங்கு அசிசாவின் டுவிட்டர் கணக்கு செயலிழக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டிருந்தன.