Home One Line P1 செயற்கை மழை மூலம் சிலாங்கூரில் புகை மூட்டம் கையாளப்படும்!

செயற்கை மழை மூலம் சிலாங்கூரில் புகை மூட்டம் கையாளப்படும்!

774
0
SHARE
Ad
படம்: நன்றி டி ஸ்டார்

ஷா அலாம்: ஆரோக்கியமற்றதாக கருதப்படும் 200-க்கும் மேற்பட்ட காற்று மாசுபாடு குறியீட்டு (ஏபிஐ) பதிவான பகுதிகளில் மேக விதைப்பு நடவடிக்கைகளை (செயற்கை மழை) செயல்படுத்த சிலாங்கூர் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது

பசுமை தொழில்நுட்பம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு (எஸ்டிஐ) மற்றும் நுகர்வோர் விவகாரங்களுகான ஆட்சிக்குழு உறுப்பினர், ஹீ லோய் சியான் ஓர் அறிக்கையில், இந்த நடவடிக்கை நேற்று வியாழக்கிழமை சிலாங்கூர் பொருளாதார நடவடிக்கைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஏபிஐ 151 முதல் 200 வரை பதிவுகளைக் கொண்டிருக்கும் போது, ​​மாவட்ட மற்றும் மாநில மட்டங்களில் உள்ள பேரிடர் மேலாண்மைக் குழுவும் செயல்படுத்தப்படும். சிலாங்கூர் சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதலின் பேரில் ஏபிஐ 200-க்கும் மேற்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் பாலர் பள்ளிகள் உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

சிலாங்கூரை பாதிக்கும் திறந்தவெளியில் தீ மூட்டுவது தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு காண, மாநில அரசு தேசிய திறந்தவெளி செயல் திட்டம் மற்றும் எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சு வெளியிட்டுள்ள தேசிய புகை மூட்டம் செயல் திட்டத்தை ஏற்று செயல்படுத்தும்என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் வழங்கிய அறிவுறுத்தல்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றும், புகை மூட்டம் காலங்களில் திறந்தவெளியில் தீ மூட்டுவது போன்ற நடவடிக்கைகளை மக்கள் கைவிட வேண்டும் என்று அவர் நினைவுபடுத்தினார்.

இன்று வெள்ளிக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி சுற்றுச்சூழல் துறையின் வலைத்தளத்தின்படி, ஜொஹான் செத்தியாவில் 209 ஏபிஐ பதிவாகி உள்ளது. ஷா அலாம் (133), கிள்ளானில் 124, பந்திங் (122) , பெட்டாலிங் ஜெயா (135), கோலா சிலாங்கூர் (109) எனபதிவாகி உள்ளாது.