Home Nation பி.டி. 3 (PT3) தமிழ் மொழி தேர்வுக்கான வழிகாட்டி பயிற்சி நூல் வெளியீடு

பி.டி. 3 (PT3) தமிழ் மொழி தேர்வுக்கான வழிகாட்டி பயிற்சி நூல் வெளியீடு

2304
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அடுத்த மாதம் தொடங்கும் மூன்றாம் படிவம், பி.டி.3 (PT3) தேர்வுகளில் தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுத்துத் தேர்வெழுதவிருக்கும் மாணவர்களுக்கு உதவும் நோக்கில் ஐந்து தொகுதிகள் மாதிரி கேள்வித் தாள்களும், அதற்குரிய விடைகளும் மற்றும் மாதிரிக் கட்டுரைகளையும் உள்ளடக்கிய தேர்வு வழிகாட்டி பயிற்சி நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே, யுபிஎஸ்ஆர் தேர்வுகளுக்கான 5 பாடங்கள் மற்றும் எஸ்பிம் தமிழ்மொழி ஆகியவற்றுக்கான தேர்வு வழிகாட்டி நூல்களைத் தயாரித்து வெளியிட்டிருக்கும் வி ஷைன் நிறுவனம் இந்த பி.டி.3 தேர்வு வழிகாட்டி நூலையும் வெளியிட்டுள்ளது.

முன்பு பிஎம்ஆர் என்றும் தற்போது பி.டி.3 என்றும் அழைக்கப்படும் மூன்றாம் படிவத்துக்கான தமிழ் மொழிப் பாடத்தைக் கற்பிப்பதில் பல ஆண்டுகள் அனுபவம் பெற்ற விக்னேஸ்வரி சாம்பசிவம் இந்த நூலை உருவாக்கியுள்ளார்.

#TamilSchoolmychoice

இந்த பி.டி.3 தேர்வு வழிகாட்டி பயிற்சி நூல் கல்வி அமைச்சின் தேர்வு வாரியம் அறிமுகப்படுத்தியுள்ள 2019-க்கான புதிய அமைப்பு முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நூலில் 5 பிரிவுகள் அடங்கிய 5 தொகுதிகள் மாதிரி வினாத்தாட்கள் மற்றும் அவற்றுக்கான ஏற்புடைய பதில்கள் ஆகியவற்றோடு, வகைக்கு இரு கட்டுரைகளாக 10 மாதிரிக் கட்டுரைகளையும் இணைக்கப்பட்டுள்ளன.

தேர்வுகள் நெருங்கி வரும் நேரத்தில் மாதிரி கேள்வித் தாள்களைக் கொண்டு, நேரக் கட்டுப்பாட்டுடன் பயிற்சி செய்வது மாணவர்கள் சிறந்த  தேர்ச்சி அடைய வழிவகுக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட அனுபவ முறையாகும். அந்த அடிப்படையில் இந்த நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது என நூலுக்கான முன்னுரையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நூலைப் பெற விரும்புபவர்கள் கீழ்க்காணும் மின்னஞ்சல் முகவரி அல்லது கைத்தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்:

+6012-3922497

vshinecreations@gmail.com