Home One Line P1 அம்னோ-பாஸ்: நம்பிக்கைக் கூட்டணி வசமுள்ள 5 மாநிலங்களையும் வெல்வோம்!- முகமட் ஹசான்

அம்னோ-பாஸ்: நம்பிக்கைக் கூட்டணி வசமுள்ள 5 மாநிலங்களையும் வெல்வோம்!- முகமட் ஹசான்

828
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி கையில் விழுந்த ஐந்து மாநிலங்களை பாஸ் உடனான தனது கட்சி கூட்டணி மீண்டும் கைப்பற்ற வல்லது என்று அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் நம்புகிறார்.

மலாக்கா, நெகிரி செம்பிலான், கெடா, பேராக் மற்றும் ஜோகூர் ஆகிய ஐந்து மாநிலங்களை மீண்டு கைப்பற்ற முடியும் என்று அவர் கூறினார்.

கூடுதலாக, தேசிய முன்னணியும் பாஸ் கட்சியும் கிளந்தான், திரெங்கானு, பகாங் மற்றும் பெர்லிஸ் ஆகிய நான்கு மாநிலங்களில் வெற்றியைத் தக்கவைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

போட்டியிடும் இடங்கள் பற்றி உடனே பேச வேண்டாம். நாம் வெல்ல விரும்புகிறோம். நாம் வெல்ல வேண்டும். பேராசை கொள்ளாதீர்கள். பிறகு நாம்தான் இழந்து நிற்போம்” என்று அவர் 3,000 அம்னோ மற்றும் பாஸ் உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றினார்.

கடந்த 14-வது பொதுத் தேர்தலில், தேசிய முன்னணி அரசாங்கம், கடந்த 60 ஆண்டுகளில் முதல் முறையாக சரிந்தது மட்டுமல்லாமல், ஒரு காலத்தில் அவர்களின் கோட்டையாக இருந்த மாநிலங்களையும் இழந்தது.

14-வது பொதுத் தேர்தலில், தேசிய முன்னணி சபா மற்றும் ஜோகூர், மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களை நம்பிக்கைக் கூட்டணியிடம் இழந்தது.

கெடா மற்றும் பேராக் ஆகிய மாநிலங்களையும் தேசிய முன்னணி கைப்பற்ற இயலவில்லை.