Home 13வது பொதுத் தேர்தல் தொகுதி வழங்காவிட்டாலும் தொடர்ந்து பிகேஆர் பிரச்சாரங்களில் ஈடுபடுவேன்- சுவா

தொகுதி வழங்காவிட்டாலும் தொடர்ந்து பிகேஆர் பிரச்சாரங்களில் ஈடுபடுவேன்- சுவா

495
0
SHARE
Ad

Chua Jui Mengபெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 5 – எதிர்வரும் பொதுத்தேர்தலில் தான் எதிர்பார்த்த தொகுதியான கேலாங் பாத்தாவில், ஜ.செ.க கட்சியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டதால் விரக்தியடைந்திருந்த ஜோகூர் மாநில பிகேஆர் தலைவர் சுவா ஜூய் மெங், கடந்த சில நாட்களாக தனது கட்சியின் சார்பாக நடந்த தேர்தல் பிரச்சாரங்களில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்தார்.

ஆனால் இன்று பெட்டாலிங் ஜெயாவில் பிகேஆர் சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த சுவா,  தனது மௌனம் உடைத்து லிம் கிட் சியாங்கிற்கு ஆதரவு கொடுக்கும்படி தனது தொகுதி மக்கள் அனைவரையும்  கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து சுவா கூறுகையில், கேலாங் பாத்தா தொகுதியில், ஜ.செ.க தலைவர் லிம் கிட் சியாங் போட்டியிடுவதால் தனக்கு எந்த ஒரு வருத்தமும் இல்லை என்றும், தனக்கு போட்டியிட தொகுதி ஏதும் வழங்கப்படவில்லை என்றாலும், பிகேஆர், பாஸ் மற்றும் ஜ.செ.க கூட்டணிக்காக தான் தொடர்ந்து பிரச்சாரங்களை மேற்கொள்ளப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

பிகேஆர் சார்பாக தொகுதி ஒதுக்கப்படாததால் கட்சி மாறுவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, பிகேஆரை விட்டு தாம் விலகப்போவதில்லை என்று சுவா உறுதியாக கூறியுள்ளார்.