Home One Line P2 செப்டம்பர் 22: மோடி, டிரம்ப் அமெரிக்க இந்தியர்களை சந்திக்கின்றனர்!

செப்டம்பர் 22: மோடி, டிரம்ப் அமெரிக்க இந்தியர்களை சந்திக்கின்றனர்!

1460
0
SHARE
Ad

வாஷிங்டன்: ஹூஸ்டனில் நடைபெறும் அமெரிக்க இந்தியர்கள் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைவார் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இந்த சந்திப்பானது இரு தலைவர்களுக்கிடையிலான பிணைப்பைக் காட்டுவதாக அது குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க சமூகத்துக்கு முன் ஒரு வெளிநாட்டுத் தலைவரும், அமெரிக்க அதிபரும் ஓர் இன சமூகத்தின் முன் தோன்றக்கூடிய இந்த சந்திப்பானது, ஓர் அரிய கூட்டுத் தோற்றத்தைக் குறிப்பதாகவும், மேலும் இவ்விரண்டு தலைவர்களின் மூன்றாவது சந்திப்பாக திகழ்வதாக அது தெரிவித்துள்ளது.

ஹூஸ்டன் டெக்சன்ஸ் கால்பந்து அணியின் இல்லமான என்ஆர்ஜி அரங்கிற்குகுள் நடைபெறும் இந்த நிகழ்விற்கு 50,000-க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

#TamilSchoolmychoice

இந்த சந்திப்பிற்குப் பின்னர், செப்டம்பர் 27-ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் உரையாற்ற மோடி நியூயார்க் நகரத்திற்குச் செல்வார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இந்த கூட்டம்அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வலுவான உறவுகளை வலியுறுத்துவதற்கும், உலகின் பழமையான மற்றும் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளுக்கிடையேயான மூலோபாய பங்காளித்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கும் அவர்களின் ஆற்றல் மற்றும் வணிக உறவை ஆழப்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி விவாதிப்பதற்கும் ஒரு சிறந்த வாய்ப்பாகும்என்று வெள்ளை மாளிகை கூறினார்.