Home One Line P2 இந்தோனிசியா: காட்டுத் தீயை கட்டுப்படுத்த எல்லா விதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்!

இந்தோனிசியா: காட்டுத் தீயை கட்டுப்படுத்த எல்லா விதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்!

883
0
SHARE
Ad

களிமந்தான்: இந்தோனிசிய அதிபர் ஜோகோ விடோடோ (ஜோகோவி), இந்தோனிசியா தரப்பு தற்போது அக்குடியரசின் சில பகுதிகளில் கடுமையான புகை மூட்டத்தை ஏற்படுத்திய காட்டுத் தீயை சமாளிக்கும் முயற்சியில் எல்லா விதமான சாத்தியக்கூறுகளையும் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

தீயை நிறுத்த நாங்கள் முயற்சி செய்கிறோம் …” என்று அவர் தனது டுவிட்டர் மற்றும் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கு வழியாக குறிப்பிட்டுள்ளார்.

அவர் மெர்பாவ் கிராமம், புனுட் மாவட்டம், பெலலாவன் மாவட்டம், ரியாவ் ஆகிய இடங்களில் தீயணைப்பு நடவடிக்கைகளைப் பார்வையிடும் படத்தையும் வெளியிட்டிருந்தார்.

#TamilSchoolmychoice

ரியாவ் மாகாணத்திற்கு 5,600 கூடுதல் தீயணைப்பு வீரர்களை அனுப்பியதாக ஜோகோவி கூறினார்.

தற்போது, ​​ரியாவ், ஜாம்பி மற்றும் களிமந்தான் ஆகிய இடங்களில் தீயை அணைக்க 10,000 காவல் துறையினர் மற்றும் இராணுவ வீரர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த புகை மூட்டமானது உள்ளூர் மக்களை தொந்தரவு செய்தது மட்டுமல்லாமல், இப்போது எல்லையைத் தாண்டி அண்டை நாடுகளை பாதித்துள்ளதாக ஜோகோவி ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

தீயை ஏற்படுத்திய தனிநபர் அல்லது நிறுவனம் மீது அரசாங்கம் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கும் என்று ஜோகோவி கூறினார்.

கடந்த ஜனவரி முதல், இந்தோனிசியாவின் ரியாவ், ஜாம்பி மற்றும் களிமந்தான் போன்ற பல மாகாணங்களில் 42,000 ஹெக்டேருக்கு மேற்பட்ட காடுகள் மற்றும் வயல்கள் எரிக்கப்பட்டுள்ளன.