Home One Line P1 மலேசிய குடியுரிமை: தாய்மார்களுக்கு சாதகமாக சட்டம் திருத்தப்படும்!

மலேசிய குடியுரிமை: தாய்மார்களுக்கு சாதகமாக சட்டம் திருத்தப்படும்!

807
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசிய தாய்மார்கள் வெளிநாடுகளில் பிறந்த தங்கள் குழந்தைகளுக்கு தானாகவே குடியுரிமை பெற அனுமதிக்க மத்திய அரசியலமைப்பின் 14-வது பிரிவை திருத்துவதை அரசாங்கம் கவனித்து வருவதாக மகளிர், குடும்பம், சமூக மேம்பாட்டு துணை அமைச்சர் ஹன்னா இயோ கூறினார்.

தற்போது மலேசிய தந்தையர்கள் மட்டுமே வெளிநாடுகளில் பிறந்த தங்கள் குழந்தைகளுக்கு மலேசிய குடியுரிமையைப் பெற அனுமதிக்கப்படுவதாகவும், அதே நோக்கத்திற்காக தாய்மார்கள் விண்ணப்பிக்க வேண்டியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாம் 2019-இல் வாழ்கிறோம். மலேசிய ஆண்களும் பெண்களும் சமமாக நடத்தப்பட வேண்டும்.  இந்தச் சட்டத்தால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்தத் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சு மற்றும் வெளியுறவு அமைச்சிடம் நாங்கள் கடிதம் எழுதியுள்ளோம். இந்த ஆண்டு ஏப்ரல் முதல் நாங்கள் சந்தித்து வருகிறோம். மூன்று அமைச்சகங்கள் இந்த விவகாரம் பற்றி விவாதித்து வருகின்றன. இதுவரை கருத்துக்கள் சாதகமாகவே அமைந்துள்ளது” என்று இன்று புதன்கிழமை அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

குடியுரிமை பிரச்சனை மன அழுத்தம், அதிர்ச்சி, உடல்நலம் மற்றும் கல்வி உள்ளிட்ட, குழந்தைகளின் பராமரிப்பின் அடிப்படையில் சிக்கல்களை ஏற்படுத்துவதாக இயோ கூறினார்.

14-வது பிரிவுக்கு முன்மொழியப்பட்ட திருத்தம் நாட்டில் உள்ள குடும்பங்கள் மற்றும் குழந்தைகளுக்கு மிகவும் சமமான வாய்ப்புகளை வழங்க பல தரப்புகளின் ஆதரவைப் பெறும் என்று அவர் நம்புவதாகக் கூறினார்.