Home One Line P1 புகை மூட்டம் : 2 ஆயிரம் பள்ளிகள் மூடப்பட்டன – 2 மில்லியன் மாணவர்கள் பாதிப்பு

புகை மூட்டம் : 2 ஆயிரம் பள்ளிகள் மூடப்பட்டன – 2 மில்லியன் மாணவர்கள் பாதிப்பு

909
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நாடு முழுமையிலும் மோசமான புகைமூட்டம் நிலவும் சூழ்நிலையில் பல மாநிலங்களில் இந்த வாரம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. இதைத் தொடர்ந்து சுமார் 2 மில்லியன் மாணவர்கள் தங்களின் பள்ளிக் கல்வியைத் தொடர முடியாமல் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

அதுவும், அடுத்த மாதத்தில் பி.டி.3, எஸ்பிஎம், எஸ்டிபிஎம் தேர்வுகள் நடைபெறவிருக்கும் நிலையில் பள்ளிக்குச் செல்ல முடியாமல் மாணவர்கள் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர்.

நேற்று புதன்கிழமை காற்றின் தூய்மைக் கேடு 200 புள்ளிகளைத் தாண்டியதைத் தொடர்ந்து சிலாங்கூர், புத்ராஜெயா, கோலாலம்பூர், பினாங்கு, கெடா, பேராக், நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் உள்ள 2,459 பள்ளிகள் மூடப்பட்டன.

#TamilSchoolmychoice

இந்த மாநிலங்களில் மட்டும் 1,732,842 மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றனர்.

சரவாக் மாநிலத்திலும் 373 பள்ளிகள் மூடப்பட்டன.

காற்றின் தூய்மைக் கேடு மேம்பட்டால் கட்டம் கட்டமாக இந்தப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.