Home One Line P1 ஜாகிர் நாயக்: புதிய மலேசியாவில் தப்பி ஓடிவந்தவருக்காக விசாரிக்கப்படுவது முரணான செயல்!- முன்னாள் தூதர்

ஜாகிர் நாயக்: புதிய மலேசியாவில் தப்பி ஓடிவந்தவருக்காக விசாரிக்கப்படுவது முரணான செயல்!- முன்னாள் தூதர்

772
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் தூதர் டென்னிஸ் இக்னேஷியஸ், இஸ்லாமிய மத போதகர் டாக்டர் ஜாகிர் நாயக்கிற்கு எதிரான அறிக்கை தொடர்பாக, தமது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய அழைத்த காவல்துறையின் நடவடிக்கையானது, புதிய மலேசியா சகாப்தத்தில் ஏற்பட்ட ஓர் அதிர்ச்சிகரமான சம்பவம் என்று விவரித்துள்ளார்.

நஜிப் ரசாக் நிருவாகத்தின் இருண்ட நாட்களில் கூட, தனதுஎழுத்துக்கள் தொடர்பாக அவரை ஒருபோதும் காவல் துறையினர் அழைக்கவில்லை என்று அவர் சுட்டிக் காட்டினார்.

புதிய மலேசியாவின் இந்த சகாப்தத்தில், தப்பியோடி வந்த ஒருவர் தாக்கல் செய்த புகார் அறிக்கைக் குறித்து விசாரிப்பதற்காக நான் காவல்துறையினரால் அழைக்கப்பட்டிருப்பது முரணானது என்று நினைக்கிறேன்.” என்று அவர் நேற்று புதன்கிழமை புக்கிட் அமானில் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

#TamilSchoolmychoice

இருப்பினும், விசாரணையின் போது காவல்துறையினர் தங்கள் பணியை சிறப்பாகச் செய்தனர் என்று அவர் குறிப்பிட்டார்.