Home One Line P2 இஸ்ரோ: நாசா அனுப்பிய ‘ஹலோ’ செய்தியை விக்ரம் லேண்டர் பெறவில்லை!

இஸ்ரோ: நாசா அனுப்பிய ‘ஹலோ’ செய்தியை விக்ரம் லேண்டர் பெறவில்லை!

865
0
SHARE
Ad

புது டில்லி: அண்மையில் விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தினை கண்டறிந்ததாகவும், அதனுடனான தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ முயன்று வருவதாகவும் குறிப்பிட்டிருந்தது.

விகரம் லேண்டருடனான தொடர்பை ஏற்படுத்த இயலாத பட்சத்தில், நாசா முன்வந்து உதவுவதாகத் தெரிவித்திருந்தது. ஆயினும், தற்போது இஸ்ரோ அனுப்பிய விகரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று நாசா தெரிவித்துள்ளது.

சந்திரயான் 2 விண்கலத்திலிருந்து பிரிந்து நிலவில் தரையிறங்க 400 மீட்டர்  (இந்தியா டுடேயில் ஆக கடைசியாக வெளியிடப்பட்ட தொலைவு அடிப்படையில்தொலைவே இருந்தபோதுதரைக்கட்டுப்பாட்டு நிலையத்துக்கும் விக்ரம் லேண்டருக்குமான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது என இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்திருந்தார்.  

#TamilSchoolmychoice

கடந்த 2009-ஆம் ஆண்டு நாசா அனுப்பிய புலனாய்வு ஆர்பிட்டர் நிலவைச் சுற்றி ஆய்வு செய்து வருகிறது. இதன் மூலமாக விக்ரமின் இருப்பிடத்தை கண்டறிய முயற்சிகள் செய்யப்பட்டது. விக்ரமின் புகைப்படத்தை எடுத்து அனுப்பவும், அதற்கு சமிக்ஞை அனுப்பவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆயினும், விக்ரம் லேண்டரின் புகைப்படத்தை எடுக்க முடியவில்லை என்றும், அதனுடன் தொடர்பு கொள்ள இயலவில்லை என்றும் நாசா தெரிவித்துள்ளது.

நிலவின் மேற்பரப்பில் இருக்கும் ரோவருக்கான ஆயுட் காலமானது ஒரு நிலவு நாள்இது கிட்டத்தட்ட 14 நாட்களுக்குச் சமமாகும்விக்ரம் லேண்டர்நிலவின் மேற்பரப்பில் சாய்ந்த நிலையில் விழுந்து ஒரு வாரத்திற்கும் மேல் கடந்துள்ள நிலையில், விக்ரமுடனான தொடர்பு சாத்தியப்படாது எனும் நிலை ஏற்பட்டுள்ளது.