Home One Line P2 ஜாகிர் நாயக் மீது புதிய ஆணைப்பத்திரத்தை வெளியிட்ட மும்பை நீதிமன்றம்!

ஜாகிர் நாயக் மீது புதிய ஆணைப்பத்திரத்தை வெளியிட்ட மும்பை நீதிமன்றம்!

827
0
SHARE
Ad
நன்றி: படம் அசிஸ் அஸ்ரார்

புது டில்லி: இந்திய இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் மீது மும்பை சிறப்பு நீதிமன்றம் புதிய பிணையில்லாத ஆணைப்பத்திரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த ஆணைப்பத்திரம் கடந்த 2016-இல் பணமோசடி குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையது என்று என்டிடிவி தெரிவித்துள்ளது.

இந்த வழக்கை விசாரிக்கும் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டைத் தொடர்ந்து பண மோசடி தடை நீதிமன்றம் நீதிபதி பி.பி.ராஜ்வைத்யா இந்த ஆணைப்பத்திரத்தை பிறப்பித்ததாக அது தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

ஜாகிர் தனது வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்திற்கு நேரில் வர இரண்டு மாதங்கள் கோரி மேல்முறையீடு செய்திருந்தார். இருப்பினும் அம்முறையீடு நிராகரிக்கப்பட்டது. கடந்த திங்களன்று, அமலாக்கத்துறை புதிய பினையில்லாத ஆணைப்பத்திரத்தை தாக்கல் செய்திருந்தது.

கடந்த 2016-ஆம் ஆண்டு வழக்கில் நடந்த குற்றத்தின் விளைவாக 193.06 கோடி ரூபாய் (113.4 மில்லியன் ரிங்கிட்) தொகையை அடையாளம் கண்டுள்ளதாக அமலாக்கத்துறை கூறியதாக அது தெரிவித்துள்ளது.

சர்ச்சைகுரிய இஸ்லாமிய மத போதகரான ஜாகிர் கடந்த 2016-ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறி மலேசியாவில் நிரந்தர குடியுரிமை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.