“ஊழல் பற்றிய தகவல்களை வழங்கும் நிறுவனங்கள் பாதுகாக்கப்படும்” என்று மகாதீர் குறிப்பிட்டதாக இன்று வெள்ளிக்கிழமை நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் மேற்கோளிட்டுள்ளதாக மலேசியாகினி பதிவிட்டுள்ளது.
ஊழலைக் கட்டுப்படுத்த உதவி கோருவதற்காக நாட்டின் பெருநிறுவன அமைப்புகளுடனான கூட்டு நிகழ்ச்சியில் பிரதமர் இவ்வாறு கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊழலை அம்பலப்படுத்துவது நாட்டின் வணிகத் துறைக்கு நல்லது என்று மகாதீர் கூறினார்.
“ஊழல் குறைக்கப்படும்போது, நிறுவனங்கள் அதிக பணம் சம்பாதிக்க முடியும், இதன் விளைவாக தொழிலாளர்கள், பங்குதாரர்கள் மற்றும் பொது மக்களுக்கு நன்மைகளை அதிகரிக்க முடியும்” என்று அவர் கூறினார்.
Comments