Home One Line P1 ஜாகிருக்கு எதிராக ஓடித் தலைமறைவான பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டம் பாயலாம்!

ஜாகிருக்கு எதிராக ஓடித் தலைமறைவான பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டம் பாயலாம்!

731
0
SHARE
Ad
படம்: நன்றி பெர்னாமா

கோலாலம்பூர்: சர்ச்சைக்குரிய இஸ்லாமிய போதகர் டாக்டர் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக ஓடித் தலைமறைவான பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டத்தை (FEOA) பயன்படுத்த இந்திய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவின் அமலாக்கத்துறைக்கு நெருக்கமான வட்டாரம் கூறுகையில்,எங்களால் விசாரிக்கப்படும் ஜாகிருக்கு எதிராக ஓடித் தலைமறைவான பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டத்தை உபயோகிக்கும் யோசனையில் இருக்கிறோம்என்று இந்திய ஊடகம் தெரிவித்ததாக ப்ரி மலேசியா டுடே தெரிவித்துள்ளது.

இந்த கைது ஆணை பிறப்பிக்கப்பட்ட ஒருவர் வழக்கிலிருந்து தவிர்ப்பதற்காக இந்தியாவை விட்டு வெளியேறியோ அல்லது வெளிநாட்டில் இருந்து கொண்டு திரும்பி வர மறுக்கிற சூழலில், அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரத்தை எப்இஒஏ வழங்குகிறது.

#TamilSchoolmychoice

ஓடித் தலைமறைவான பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டத்தின் கீழ்தப்பியோடிய பொருளாதார குற்றவாளி”யின் அனைத்து சொத்துகளையும் அமலாக்கத்துறை பறிமுதல் செய்ய அனுமதிக்கும்.

இந்தியாவில் பிறந்த ஜாகிர் 2016-இல் மலேசியாவில் தஞ்சம் புகுந்து மலேசியாவில் நிரந்தர குடியுரிமை அந்தஸ்த்தைப் பெற்றார். தனக்கு நியாயமான விசாரணை கிடைக்காது என்று கூறி, பின்னர் அவர் இந்தியாவுக்கு திரும்ப மறுத்துவிட்டார். பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டும், ஜாகிரை இந்தியாவிடம் ஒப்படைப்பது குறித்து மறுப்பு தெரிவித்திருந்தார்.