Home One Line P1 தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற உறுப்பினர் காலமானார்!

தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற உறுப்பினர் காலமானார்!

712
0
SHARE
Ad

பொந்தியான்: பிரதமர் துறை துணை அமைச்சர் டத்தோ வீரா டாக்டர் முகமட் பாரிட் முகமட் ராபிக் இங்குள்ள பொந்தியான் மருத்துவமனையில் காலை 6 மணியளவில் காலமானார்.

தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற உறுப்பினருமான முகமட் பாரிட்டின் மறைவினை ஜோகூர் மாநில பெர்சாத்து கட்சியின் செயலாளரான முகமட்சொலியான் பாட்ரி உறுதிபடுத்தினார்.

அவர் இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மாரடைப்பால் இறந்துவிட்டார் என்று நம்பப்படுகிறது,” என்று பெர்னாமாவை தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

கடந்த 14-வது பொதுத் தேர்தலில், பாரிட், தஞ்சோங் பியாய் நாடாளுமன்றத் தொகுதியில் 21,255 வாக்குகள் பெற்று, மசீசவின் டத்தோஶ்ரீ வீ ஜெக் செங்கை வீழ்த்தினார்.  

இதற்கிடையில், தஞ்சோங் பியா தொகுதியில் மீண்டும் ஒரு நாடாளுமன்ற இடைத் தேர்தல் நடக்க சாத்தியம் ஏற்பட்டுள்ளது.