Home One Line P1 “சிலாங்கூர் காவல் துறை மீது நம்பிக்கை இழந்து விட்டோம், புக்கிட் அமான் விசாரிக்க வேண்டும்!”- அருட்செல்வன்

“சிலாங்கூர் காவல் துறை மீது நம்பிக்கை இழந்து விட்டோம், புக்கிட் அமான் விசாரிக்க வேண்டும்!”- அருட்செல்வன்

913
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அண்மையில் ரவாங்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை சிலாங்கூர் காவல் துறையினர் கையாண்டது குறித்த கவலைத் தெரிவித்த பிஎஸ்எம் கட்சித் துணைத் தலைவர் எஸ். அருட்செல்வன், இந்த விசாரணையை புக்கிட் அமான் ஏற்று நடத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பங்கள் முன் வந்து சந்தேகத்திற்குறிய ஆவணங்களை முன்வைத்த பிறகு, சிலாங்கூர் காவல் துறையின் மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாக அவர் கூறினார்.

சிலாங்கூர் காவல் துறைத் தலைவர் நோர் அஸாம் ஜமாலுடின் முன்னதாக கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி, மூன்று கொள்ளையர்களைக் சுட்டுக் கொன்றதாகவும், சம்பந்தப்பட்ட அந்த வாகனத்தில் துப்பாக்கிகள், கத்திகள் மற்றும் முகமூடிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறினார்.

#TamilSchoolmychoice

அவர் (நோர் அஸாம்) விரைந்து நிலையான பதிலைக் கூறியுள்ளார். அவரது பதிப்பு தற்போதைய ஆதாரங்களுடன் ஒத்துழைப்பதாகத் தெரியவில்லைஎன்று அருட்செல்வன் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

காவல் துறையினரின் குற்றச்செயல்களை விசாரிக்கும் ஆணையமான,  ஐபிசிஎம்சி இருந்திருந்தால், நாம் புக்கிட் அமானின் உதவியை நாட வேண்டியிருந்திருக்காது. தற்போது, ஆதாரங்களை விசாரிக்க நடுநிலை மற்றும் சுயாதீனமாக இருக்க புக்கிட் அமானின் உதவியை நாம் நம்ப வேண்டும்என்று அவர் கூறியுள்ளார்.

கொல்லப்பட்ட எஸ். மகேந்திரன் (23), ஜி.தவசெல்வன் (31), இலங்கை நாட்டைச் சேர்ந்த வி.ஜனார்த்தனன் (40) மற்றும் நான்காவது நபரான ஜி.மோகனம்பாள் (35) சம்பவ இடத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இப்போது அவர் காணவில்லை என்று விசாரணை தொடரப்பட்டுள்ளது.