Home One Line P2 செப்டம்பர் 22: “ஹவுடி, மோடி” நிகழ்ச்சியில் அமெரிக்க இந்தியர்களை சந்திக்கும் மோடி!

செப்டம்பர் 22: “ஹவுடி, மோடி” நிகழ்ச்சியில் அமெரிக்க இந்தியர்களை சந்திக்கும் மோடி!

848
0
SHARE
Ad

புது டில்லி: இந்தியா மற்றும் அமெரிக்காவின் இருதரப்பு உறவுகளை அதிகரிக்கும் நோக்கில் நியூயார்க்கில் நடைபெற இருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் 74-வது அமர்வில் கலந்து கொள்வதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெள்ளிக்கிழமை தொடங்கி ஏழு நாட்களுக்கு அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

பிரதமர் மோடி செப்டம்பர் 21 முதல் 27 வரை அமெரிக்காவில் இருப்பார்.

வணிக சமூகத்துடனான தொடர்பு, இருதரப்பு சந்திப்புகள் மற்றும் ஹூஸ்டனில் நடக்க இருக்கும்ஹவுடி, மோடிநிகழ்ச்சியில் இந்திய புலம்பெயர்ந்தோருடனான நிகழ்ச்சியில் மோடி பேசவும் உள்ளார்.

#TamilSchoolmychoice

ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில்  குறைந்தது 50,000 அமெரிக்க இந்தியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, ஹூஸ்டனில் நடைபெறும் அமெரிக்க இந்தியர்கள் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைவார் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.