Home One Line P1 நாங்குநேரியில் காங்கிரஸ்; விக்கிரவாண்டியில் திமுக – மீண்டும் பரபரப்பான இடைத் தேர்தல்கள்

நாங்குநேரியில் காங்கிரஸ்; விக்கிரவாண்டியில் திமுக – மீண்டும் பரபரப்பான இடைத் தேர்தல்கள்

1059
0
SHARE
Ad

சென்னை – வேலூர் இடைத் தேர்தல் நடந்து முடிந்து, திமுக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சில வாரங்கள் அமைதியாக இருந்த தமிழகத் தேர்தல் களம், இன்று விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் பரபரப்பாக, சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

தொகுதி உடன்பாடு அடிப்படையில் நாங்குநேரியில் மீண்டும் காங்கிரஸ் போட்டியிடும் எனவும் விக்கிரவாண்டியில் திமுக போட்டியிடும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

இந்த இரண்டு தொகுதிகளுக்குமான வாக்களிப்பு அக்டோபர் 21-ஆம் தேதி நடைபெறும். வாக்குகள் அக்டோபர் 24-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

#TamilSchoolmychoice

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 30 வரை வேட்புமனுத் தாக்கல் நடைபெறும். அக்டோபர் 1-ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படும். வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாளாக அக்டோபர் 3-ஆம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.