Home One Line P0 புகை மூட்டம் மேம்பட்டது : செவ்வாய்க்கிழமை பள்ளிகள் மூடப்படாது

புகை மூட்டம் மேம்பட்டது : செவ்வாய்க்கிழமை பள்ளிகள் மூடப்படாது

1176
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – நாடு முழுமையிலும் புகைமூட்டமும், காற்றின் தூய்மையும் மேம்பட்டதைத் தொடர்ந்து நாளை செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 24) பள்ளிகள் எதுவும் மூடப்படாது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எனினும், நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அவ்வப்போது அறிக்கைகள் வழி நிலவரங்கள் அறிவிக்கப்படும்.

நிலைமையைப் பற்றித் தெரிந்து கொள்ள கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ இணையத் தளத்தையும், அதன் சமூக ஊடகப் பக்கங்களையும் பின்பற்றி வரவேண்டும் எனவும் கல்வி அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

#TamilSchoolmychoice

மிக மோசமான புகைமூட்டம் இன்று மாலை 6.00 மணிக்கு கிள்ளான் வட்டாரத்தில் 188 புள்ளிகள் எனப் பதிவு செய்யப்பட்டது.

புகைமூட்ட நிலைமை 200 புள்ளிகளைத் தாண்டும்போது அது அபாய அளவாக அறிவிக்கப்பட்டு, பள்ளிகள் மூடப்படுகின்றன.