மூன்று நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையின் இருதய சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட இரவியின் உடல்நலம் தற்போது சீரான நிலையில் இருந்து வருவதாக அவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்த நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருண் தெரிவித்தார்.
தற்போது நாட்டில் நிலவி வரும் புகைமூட்டம் காரணமாக இரவி மூச்சு விடுவதற்கு சிரமப்படுகிறார் எனவும் மந்திரி பெசார் தெரிவித்தார்.
அவர் நன்கு ஓய்வெடுத்து விட்டு உடல் நலம் பெற்று வரட்டும் என்றும் அமினுடின் தெரிவித்திருக்கிறார்.
Comments