நியூயார்க் – தனது பிரதமர் பதவியை எப்போது அன்வாருக்கு விட்டுக் கொடுப்பது என்பது குறித்து மாறி மாறி கருத்துகள் கூறிவரும் துன் மகாதீர் மீண்டும் ஒருமுறை சர்ச்சையான ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.
நியூயார்க் நகரில் வெளியுறவு துறை மீதான மன்றத்தின் கலந்துரையாடலில் கலந்து கொண்டு பேசியபோது, கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், “அடுத்த பொதுத் தேர்தலுக்குள் நான் பதவியை இன்னொரு வேட்பாளருக்கு விட்டுக் கொடுக்க உறுதியளித்தேன். அப்படிப் பார்த்தால் எனக்கு இன்னும் 3 ஆண்டுகள் கால அவகாசம் இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.
அடுத்த ஆண்டில் பிரதமராகப் பதவி ஏற்பேன் என பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் அண்மையில் கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து பிரதமர் பதவியிலிருந்து விலகும் தேதியை நானே நிர்ணயிப்பேன் என மகாதீர் கூறியிருந்தார்.
அடுத்த பொதுத் தேர்தல் 2023-இல் நடைபெறும்.