Home One Line P1 தஞ்சோங் பியாய்: அம்னோ போட்டியிட்டால், காப்பார் மசீச கட்சியிலிருந்து விலகும்!

தஞ்சோங் பியாய்: அம்னோ போட்டியிட்டால், காப்பார் மசீச கட்சியிலிருந்து விலகும்!

643
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் அம்னோ வேட்பாளரை நிறுத்தினால் கட்சியை விட்டு வெளியேறுவதாக மசீசவின் காப்பார் தொகுதித் தலைவர் சாங் கீ சாய் மற்றும் அவரது உறுப்பினர்கள் உறுதி அளித்துள்ளனர்.

அந்த இடம் பாரம்பரியமாக மசீசவுக்கு சொந்தமானது என்பதை வலியுறுத்திய சாங், அம்னோ தமது வேட்பாளரை நிறுத்த வேண்டுமானால், மசீச தனது சொந்த வேட்பாளரை அந்தத் தொகுதியில் நிறுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

மசீச தன்மானத்துடன் வாழ வேண்டும் என்று அவர் சீன செய்தித்தாளான சின் சியூ டெய்லி மேற்கோள் காட்டியதாக மலேசியாகினி பதிவிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதன் மூலம், கட்சியின் மையத் தலைமை அடிமட்ட உறுப்பினர்களின் குரல்களைக் கேட்கும் என்று தாம் நம்புவதாக சாங் கூறினார்.

தஞ்சாங் பியாய் நாடாளுமன்றத் தொகுதியை கைப்பற்றுவதில் மசீச ஒன்றுபட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

நேற்று வியாழக்கிழமை பிற்பகலில் செய்தியாளர் கூட்டத்தில்,  சாங்கின் அறிக்கை குறித்து மசீச தலைவர் வீ கா சியோங் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.  இடைத்தேர்தலில் வெற்றி பெற மசீச தேசிய முன்னணியின் கூட்டணி கட்சிகளுடன் ஒன்று சேரும் என்று அவர் கூறினார்.

கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதி டாக்டர் முகமட் பாரிட் காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதி காலியாகி உள்ளது.