கோலாலம்பூர்: நாட்டின் பல்லின சமூகத்தில் பதட்டத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் வெறுப்பை பரப்புவோர் மீது அரசாங்கம் சமரசம் செய்யவோ அல்லது தீர்க்கமான நடவடிக்கை எடுக்கவோ தயங்காது என்று துணை உள்துறை அமைச்சர் முகமட் அசிஸ் ஜம்மான் தெரிவித்தார்.
இன மற்றும் மத குழுக்களிடையே “இன வெறுப்பை” ஊக்குவிக்கும் நோக்கில் நாட்டில் நடந்த சில சம்பவங்களை சிலர் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பதாக அவர் கூறினார்.
“நாட்டில் இன மற்றும் மத வெறுப்பைத் தூண்ட முயற்சிக்கும் எந்தவொரு கட்சியுடனும் நாங்கள் சமரசம் செய்ய மாட்டோம். இவ்வளவு காலமாக மக்களிடையே கட்டமைக்கப்பட்டுள்ள இணக்கமான உறவை கெடுப்பதை நோக்கமாகக் கொண்ட செய்திகளைப் பரப்ப வேண்டாம். கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று அவர் எச்சரித்தார்.
“எடுத்துக்காட்டாக, ஒரு மலாய்க்காரரும், சீனரும் சுங்கசாவடியில் சண்டையிட்ட பிரச்சனை சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஓர் இனவெறிப் பிரச்சனையாக மாறியுள்ளது. இது ஒரு சாதாரண சண்டை மட்டுமே” என்று அவர் மலேசியாகினிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.