Home One Line P1 “காவல் துறையினர் கடமைகளைச் செய்யத் தவறியது அடிப்பின் மரணத்திற்கு பங்களித்துள்ளது!”- நீதிபதி ரோபியா

“காவல் துறையினர் கடமைகளைச் செய்யத் தவறியது அடிப்பின் மரணத்திற்கு பங்களித்துள்ளது!”- நீதிபதி ரோபியா

900
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த ஆண்டு சீ பீல்ட் ஸ்ரீ மகாமாரியம்மன் கோயிலில் நடந்த கலவரத்தின்போது, அடையாளம் தெரியாத இரண்டு அல்லது மூன்று தாக்குதல்காரர்கள் தீயனைப்பு வீரர் முகமட் அடிப்பை இழுத்து தாக்கியதால் அவர் மரணமுற்றதாக நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

மேலும், கலவரத்தின் போது காவல் துறையினர் தக்க நேரத்தில் செயல்படவில்லை என்று நீதிமன்றம் கண்டறிந்துள்ளாதாக நீதிபதி ரொபியா முகமட் தெரிவித்தார்.

காவல் துறையினர் மற்றும் எப்ஆர்யூ கலவரத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதால் அடிப்புக்கு மரணம் ஏற்பட்டுள்ளதாக நான் கருதுகிறேன்.

#TamilSchoolmychoice

அடிப் சம்பந்தப்படுவதற்கு முன்னர் பல இடங்களில் தீ மூட்டப்பட்டது என்பதற்கான சான்றுகள் தெளிவாகக் காட்டுகின்றன. தீயை அணைக்க விரும்பாத கலகக்காரர்களால் தீயணைப்பு வீரர்களும் அச்சுறுத்தப்பட்டனர். பல்வேறு வகையான ஏழு காவல் துறை  வாகனங்களளும், நூற்றுக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்ட இரண்டு எப்ஆர்யூ துருப்புக்கள் இருந்த போதும், கலகக்காரர்கள் தீயணைப்பு வீரர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தியதை பார்க்க மட்டுமே முடிந்துள்ளது. அவர்கள் ஆயுதங்களுடன் தயாராகி இருந்துள்ளார்கள், ஆயினும், தள்ளாடும் நிலைமைகள் இருந்தபோதிலும் அவர்களுக்கு உத்தரவு வழங்கப்படவில்லை,” என்று அவர் கூறினார்.

சம்பவம் நடந்த நேரத்தில் சுபாங் ஜெயா காவல்துறைத் தலைவரை அணுக முடியவில்லை என்று சாட்சிகளில் ஒருவர் சாட்சியமளித்ததாகவும் ரோபியா கூறினார்.

காவல் துறையினர் தங்கள் கடமைகளைச் செய்யத் தவறியது இந்த சம்பவத்திற்கு பங்களித்ததாக அவர் கூறினார்.

விசாரணையின் முடிவில், விசாரணைகளை நடத்துவதற்கும், வழக்குத் தொடரவும் நீதிமன்றம் அரசாங்க தலைமை வழக்கறிஞர் மற்றும்காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பதாகக் கூறினார்.