Home One Line P2 சென்னை உட்பட 3 பிற இந்திய நகரங்கள் கடல் மட்டத்தின் உயர்வால் பாதிக்கப்படும்!

சென்னை உட்பட 3 பிற இந்திய நகரங்கள் கடல் மட்டத்தின் உயர்வால் பாதிக்கப்படும்!

1017
0
SHARE
Ad

சென்னை: இந்தியாவின் கடற்கரையில் அமைந்துள்ள மும்பை, கொல்கத்தா, சூரத் மற்றும் சென்னை உட்பட நான்கு இந்திய நகரங்கள் கடல் மட்டத்தின் உயர்வு காரணமாக கடுமையாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என்று பருவநிலை மாற்றம் தொடர்பான அனைத்துலக அரசு குழு (ஐபிசிசி) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நூற்றாண்டின் இறுதியில் இமயமலைப் பனிப்பாறைகள் உருகுவதால் வட இந்தியாவில் பல நகரங்களும் கடுமையான நீர் நெருக்கடியை எதிர்கொள்ளும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

கடல் மட்ட உயர்வு 2100-க்குள் உலகளவில் 1.4 பில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வறிக்கை கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகள் சபையில் (ஐநா) வெளியிட்டது.

#TamilSchoolmychoice

உலகெங்கிலும் உள்ள 45 நகரங்களில் இந்த நான்கு நகரங்களும் உள்ளன. அங்கு கடல் மட்டம் 50 செ.மீ  அதிகரிப்பது வெள்ளத்திற்கு வழிவகுக்கும் என்று ஐபிசிசி தெரிவித்துள்ளது.