ஜெட்டா: தூரநோக்கு இலக்கு 2030-இன் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப சவுதி அரசாங்கம் தனது பொருளாதார வளங்களை பல்வகைப்படுத்தும் முயற்சியாக புதிய சுற்றுலா விசாவை நேற்று வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது.
ஐந்து யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள், செங்கடல் மற்றும் ரப் அல் காலி பாலைவனம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களுடன் நாடு முழுவதும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க இந்த முயற்சி முடுக்கி விடப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா தேசிய சுற்றுலா மற்றும் பாரம்பரிய ஆணையம் (எஸ்சிடிஎச்) தெரிவித்துள்ளது.
வருகைபோது விசா (Visa On Arrival) மற்றும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள சவுதி தூதரகம் மூலம் இதற்கான விண்ணப்பங்களை செய்யலாம் என்று அது குறிப்பிட்டுள்ளது.
வருகைபோது விசா வசதி 49 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் தூதரக குறிப்பு தேவையில்லாமல் தங்கள் பயண விசாக்களுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கிறது.
49 நாடுகள் உட்பட பிற நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வெளிநாடுகளில் உள்ள எந்த சவுதி அரேபியா தூதுக்குழுவின் மூலமும் புதிய சவுதி சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்.
தகுதியான ஒன்பது ஆசிய நாடுகளுள் மலேசிய உட்பட, புருனே, ஜப்பான், சிங்கப்பூர், தென் கொரியா, கஜகஸ்தான், சீனா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தும் அடங்குகிறது.