Home 13வது பொதுத் தேர்தல் 13வது பொதுத்தேர்தலில் சாமிவேலுக்கு இடமில்லை- பழனிவேலு அறிவிப்பு.

13வது பொதுத்தேர்தலில் சாமிவேலுக்கு இடமில்லை- பழனிவேலு அறிவிப்பு.

777
0
SHARE
Ad

SAMY VELUஏப்ரல் 5 – 13வது பொதுத்தேர்தலில் சாமிவேலுக்கு இடமில்லை என்றும் அவர் வெற்றி பெறக் கூடிய வேட்பாளரா இல்லையா என்பது குறித்து அதனால் கேள்வியும் எழவில்லை என்று ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேலு அறிவித்துள்ளார்.

இதன் மூலம்  ம இ காவின் முன்னாள் தேசியத்தலைவர் டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலுவுக்கு, இம்முறை சுங்கை சிப்புட் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இத்தேர்தலுக்கு எல்லா தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்னும் இறுதி செய்யப்படவில்லையாயினும், அதில் எதிலும் சாமிவேலுவின் பெயர் இல்லை என்று கட்சியின் தேசியத்தலைவர் பழனிவேலு தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

சாமிவேலு, தான் 2008 தேர்தலில் மைக்கல் ஜெயக்குமாரிடம் தோல்வியுற்றிருந்தாலும் அத்தொகுதியில் கடுமையாக அவர் வேலை செய்து வருவதாகத் தெரிவித்த பழனிவேலு, இருந்தாலும் அவர் வேட்பாளர் அல்ல என்பதால் ஊடகங்கள் சாமிவேலுவை வேட்பாளர் என்று ஊகங்கள் மூலம் தெரிவிப்பது சரியல்ல என்று கூறினார்.

முன்னதாக சுங்கைசிப்புட்   தொகுதியில் தான் நிறுத்தப்பட்டால் அங்கு தானே வெற்றிபெறக்கூடிய வேட்பாளர் என்று இந்தியாவுக்கும்தென்கிழக்காசியாவுக்குமானஉள்கட்டமைப்பு விவகாரங்களுக்கான சிறப்புத்தூதரும், முன்னால் ம இ காவின் தேசியத்தலைவருமான சாமிவேலுதெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.