Home 13வது பொதுத் தேர்தல் வாக்களிக்கும் மற்றும் வேட்புமனுத் தாக்கல் நாளை முடிவு செய்ய தேர்தல் ஆணையம் புதன்கிழமை கூடுகிறது

வாக்களிக்கும் மற்றும் வேட்புமனுத் தாக்கல் நாளை முடிவு செய்ய தேர்தல் ஆணையம் புதன்கிழமை கூடுகிறது

614
0
SHARE
Ad

The Election Commission (EC)கோலாலம்பூர், ஏப்ரல் 5 – எதிர்வரும் 13வது பொதுத்தேர்தல் மற்றும் வேட்புமனுத் தாக்கலுக்கான தேதியை முடிவுசெய்ய தேர்தல் ஆணையம் ஒரு சிறப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.

இந்தக கூட்டம் புத்ராஜெயாவில் உள்ள தேர்தல் ஆணையத்  தலைமையகத்தில் நடைபெறும் என்று அதன் செயலாளர் டத்தோ கமாருடின் முகமட் பாரியா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் இக்கூட்டத்தில் பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை முடிவு செய்யும் அதே வேளையில் முன்கூட்டியே வாக்குப் பதிவுக்கான நாளும் நிர்ணயம் செய்யப்படும் என்றார்.

#TamilSchoolmychoice

நாடாளுமன்றத்தின் கலைப்புப் பற்றிய அதிகாரபூர்வமான அறிக்கையை தாம் ஏப்ரல் 3ஆம் நாள் யாங்-டி-பெர்த்துவான் அகோங், துவாங்கு அப்துல் ஹலிம் முவாடாம் ஷா மூலம் பெற்றதாகவும் டத்தோ கமாருடின் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் சரவாக் மாநிலத் தேர்தல் 2011ல் நடந்ததால் அம்மாநிலத்தைத் தவிர மற்ற மாநிலங்களின் கலைப்புக்கான அதிகாரப்பூர்வமான அறிக்கையை தேர்தல் வாரியம் பெற்றுவிட்டதாகத் தெரிவித்தார்.

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களை அவை கலைக்கப்பட்ட 60 நாட்களுக்குள்  தேர்தல்வாரியம் நடத்தியாக வேண்டும் என்றும் கமாருடின் கூறினார்.