Home 13வது பொதுத் தேர்தல் பெர்மாத்தாங் பாவ்விலேயே மீண்டும் போட்டியிடப்போவதாக அன்வார் அறிவிப்பு

பெர்மாத்தாங் பாவ்விலேயே மீண்டும் போட்டியிடப்போவதாக அன்வார் அறிவிப்பு

580
0
SHARE
Ad

MALAYSIA-POLITICS-ANWARபுக்கிட் மெர்ட்டாஜாம், ஏப்ரல் 6- எதிர்வரும் 13 பொதுத் தேர்தலில் தனது சொந்த தொகுதியான பெர்மாத்தாங் பாவ்விலேயே மீண்டும் போட்டியிடப்போவதாக அன்வார் அறிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை பேராக் மாநிலத்தில் போட்டியிடப்போவதாக அன்வார் அறிவித்தவுடன், அவரது சொந்த தொகுதியான பெர்மாத்தாங் பாவ்வை சேர்ந்த மக்கள் அவரது முடிவு குறித்து வருத்தம் தெரிவித்தனர். ஆனால் தற்போது தேசிய முன்னணியின் வசமிருக்கும் பேராக் மாநிலத்தை, மீண்டும் கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால், தனது சொந்த தொகுதி மக்களை சமாதானப்படுத்தி, பேராக் மாநிலத்தில் போட்டியிடுவது என்று நேற்று வரை அன்வார், தனது எண்ணத்தில் உறுதியாக இருந்தார்.

ஆனால் இன்று பெர்மாத்தாங் பாவ் தொகுதியைச் சேர்ந்த சில தலைவர்கள் அன்வாரை சந்தித்து மீண்டும் அத்தொகுதியிலேயே போட்டியிடும் படி கேட்டுக்கொண்டதால், கோலாலம்பூர் மற்றும் பேராக் மாநில மக்கள் கூட்டணியைகச் சேர்ந்த தலைவர்களுடன் கலந்தாலோசித்து இறுதி முடிவு எடுக்கப்போவதாக சில மணி நேரங்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், தற்போது தனது சொந்த தொகுதியான பெர்மாத்தாங் பாவ்விலேயே மீண்டும் போட்டியிடப்போவதாக அன்வார் அறிவித்துள்ளார்.

அன்வார் கடந்த 1982 ஆம் ஆண்டு முதல் 1999 வரை பெர்மாத்தாங் பாவ் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துவந்தார், அதன் பின் அன்வார் மீது போடப்பட்ட பாலியல் வழக்கு காரணமாக அவர் சிறை செல்ல நேர்ந்தது. இதனால் அன்வாரின் மனைவியான வான் அஸிஸா, அன்வாருக்கு பதிலாக பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார்.

அதன் பிறகு, தன் கணவர் அன்வார் போட்டியிட வழி செய்யும் வகையில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை 2008ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் அத்தொகுதியில் நடத்தப்பட்ட  இடைத்தேர்தலில் வென்று, மீண்டும் அன்வார்  நாடாளுமன்ற உறுப்பினரானார்.