Home One Line P2 டிஸ்னி + – முன்கூட்டிய பதிவுகள் தொடங்கின! நெட்பிலிக்சை வீழ்த்துமா?

டிஸ்னி + – முன்கூட்டிய பதிவுகள் தொடங்கின! நெட்பிலிக்சை வீழ்த்துமா?

805
0
SHARE
Ad

நியூயார்க் – இணையம் வழி திரைப்படங்களையும், தொடர்களையும் கட்டணத்திற்கு வழங்கும் நெட்பிலிக்ஸ் நிறுவனத்தின் வளர்ந்து வரும் ஆதிக்கத்தை வீழ்த்தும் விதமாக மற்றொரு பிரபல திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான டிஸ்னி புதிய கட்டணம் செலுத்தும் இணைய சேவையைத் தொடங்கியிருக்கிறது.

டிஸ்னி + (Disney+) என்ற பெயர் கொண்ட இந்த இணைய சேவை எதிர்வரும் நவம்பர் 12-ஆம் தேதிதான் அதிகாரபூர்வமாகத் தொடங்குகிறது என்றாலும், அந்த சேவையைப் பெறுவதற்கான முன்கூட்டிய பதிவுகள் (pre-order) இப்போதே தொடங்கப்பட்டு விட்டன.

ஒரு மாதத்திற்கு 6.99 அமெரிக்க டாலர் (மலேசிய ரிங்கிட் சுமார் 29 ரிங்கிட் 33 காசுகள்) என விலை நிர்ணயிக்கப்பட்ட இந்த சேவையை ஓராண்டுக்குப் பதிவு செய்தால் 69.99 (293 ரிங்கிட் 30 காசுகள்) அமெரிக்க டாலர் விலையில் வழங்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

நவம்பர் மாதத்தில் தொடக்கம் காணும்போது, டிஸ்னி + சேவையோடு ஹூலு காணொளி (வீடியோ) சேவையும், இஎஸ்பிஎன் + (ESPN+) தொலைக்காட்சி சேவையும் இணைந்து வழங்கப்படும். அதற்கான கட்டணம் 12.99 அமெரிக்க டாலர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்தில் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள இந்த சேவை அமெரிக்காவில் தொடங்கப்படும் அதே நாளில் கனடாவிலும், ஒரு வாரம் கழித்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளிலும் தொடங்கப்படும்.

இப்போது எழுந்துள்ள கேள்வி அதிக அளவில் மக்களைச் சென்றடைந்த திரைப்படங்களையும், வசூல் சாதனை நிகழ்த்திய படங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள டிஸ்னியின் கட்டண இணைய சேவை, நெட்பிலிக்ஸ் நிறுவனத்தின் ஆதிக்கத்தை முறியடிக்குமா என்பதுதான்!

புதிய கட்டண இணைய சேவையைத் தொடர்ந்து டிஸ்னியின் வருமானம் மேலும் பன்மடங்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.