Home One Line P1 தஞ்சோங் பியாய் இடைத் தேர்தல் : நவம்பர் 16-ஆம் தேதி வாக்களிப்பு

தஞ்சோங் பியாய் இடைத் தேர்தல் : நவம்பர் 16-ஆம் தேதி வாக்களிப்பு

756
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படும் ஜோகூர் மாநிலத்தின் தஞ்சோங் பியாய் நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலுக்கான வாக்களிப்பு நவம்பர் 16-ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நவம்பர் 2-ஆம் தேதி நடைபெறும். முன்கூட்டியே வாக்களிப்பவர்களுக்கான தேதி நவம்பர் 12-ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

மொத்தம் 52, 986 வாக்காளர்கள் இந்த இடைத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.