Home One Line P1 “ஹாங்காங் தலைவர் பதவி விலக வேண்டும்” – மகாதீர் அறைகூவல்

“ஹாங்காங் தலைவர் பதவி விலக வேண்டும்” – மகாதீர் அறைகூவல்

731
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா – ஹாங்காங் ஆர்ப்பாட்டங்களால் என்ன செய்வதென்று தெரியாமல் நிலைகுலைந்து போயிருக்கும் அந்நாட்டின் ஆட்சியாளர் கேரி லாம் தனது பதவியிலிருந்து விலக வேண்டும் என துன் மகாதீர் தெரிவித்திருக்கிறார்.

அதே வேளையில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக சீனா “கடுமையான நடவடிக்கைகளை” கட்டவிழ்த்து விடும் என்றும் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

நேற்று வெள்ளிக்கிழமை பெட்டாலிங் ஜெயாவிலுள்ள ஆசிய நீதித் துறை தொடர்பான மாநாட்டில் (Lawasia conference) நடைபெற்ற கேள்வி-பதில் அங்கத்தில், கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது மகாதீர் இவ்வாறு தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“கேரி லாம் என்ன செய்வதென்ற தடுமாற்றத்தில் இருக்கிறார். அவர் அவரது மேலிடத்திற்கு அடிபணிந்தாக வேண்டும். அதேவேளையில் அவரது மனசாட்சிப்படியும் நடக்க வேண்டும். சர்ச்சைக்குரிய சட்டத்தை எதிர்ப்பதில் ஹாங்காங் மக்கள் சரியாக நடந்து கொள்கிறார்கள் என அவரது மனசாட்சி கூறுகிறது” என்றும் மகாதீர் கூறினார்.

சீனாவின் தியான்மேன் சதுக்கத்தில் நடைபெற்ற போராட்டத்தை எப்படி சீனா இரும்புக் கரம் கொண்டு அடக்கியதோ அதே போன்று ஹாங்காங் ஆர்ப்பாட்டங்களையும் கடும் நடவடிக்கைகளின் மூலம் முடிவுக்குக் கொண்டு வரும் என எச்சரித்த மகாதீர், எனவே கேரி லாம் பதவி விலகுவதே சிறந்த முடிவு என்றார்.