Home One Line P1 “இந்தியாவின் உள்விவகாரங்களில் மலேசியா தலையிடக் கூடாது” – இந்திய வெளியுறவுத் துறை எச்சரிக்கை

“இந்தியாவின் உள்விவகாரங்களில் மலேசியா தலையிடக் கூடாது” – இந்திய வெளியுறவுத் துறை எச்சரிக்கை

1249
0
SHARE
Ad

புதுடில்லி – அண்மையில் ஐக்கிய நாடுகள் மன்றத்தில் உரையாற்றிய பிரதமர் துன் மகாதீர் காஷ்மீர் விவகாரம் குறித்து சில சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.

அதன் தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை கருத்துரைத்த இந்திய வெளியுறவுத் துறையின் அதிகாரத்துவ பேச்சாளர் ரவிஷ் குமார் (படம்), மலேசியா அவ்வாறு கருத்துகள் கூறுவது தவறு எனச் சுட்டிக் காட்டியுள்ளார்.

“சுதந்திரம் பெற்ற பின்னர் மற்ற மாநில அரசர்களின் பிரதேசங்கள் போலவே காஷ்மீர் பிரதேசத்தையும் இந்தியா முறைப்படியான ஆவணங்களின்படி காஷ்மீர் அரசரிடமிருந்து பெற்று இணைத்துக் கொண்டது. பாகிஸ்தான்தான் காஷ்மீரின் சில பகுதிகளை அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமாக ஆக்கிரமித்துக் கொண்டது” என இந்திய வெளியுறவுத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் ரவிஷ்குமார் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“நமது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவுகளை நினைவில் நிறுத்த வேண்டும். இதுபோன்ற அறிக்கைகளை எதிர்காலத்தில் விடுப்பதை தவிர்க்க வேண்டும்” என்றும் இந்திய வெளியுறவுத் துறை கேட்டுக் கொண்டது.