கோலாலம்பூர்: 2020 தொலைநோக்குத் திட்டம் தோல்வி அடைந்ததற்கான முக்கியக் காரணம், முந்தைய அரசாங்கம் வளர்ச்சியடைந்த நாடாக உருமாறுவதை விட, அதிக வருமானத்தை அடைவதில் கவனம் செலுத்தியதுதான் என்று பிரதமர் மகாதீர் கூறினார்.
2020 தொலைநோக்குத் திட்டத்தினை அடைவதற்கான தீவிர முயற்சிகள் எதுவும் கடந்த 15 ஆண்டுகளில் முந்தைய அரசாங்கம் முன்னெடுக்கவில்லை என்று அவர் கூறினார்.
“2020 தொலைநோக்குத் திட்டம் மலேசியாவை ஒரு வளர்ந்த தேசமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. ஆனால் தற்போது 15 ஆண்டுகள் பின்னால் சென்றுள்ளது. அந்த இலக்கை அடைய உண்மையான முயற்சி எதுவும் செய்யப்படவில்லை, மாறாக அதிக வருமானத்தை ஈட்டுவதில் கவனம் செலுத்தினர்.”
“இது மக்களிடமிருந்து ஏதாவது ஒன்றைப் பெறுவதற்கு, அதிக ஊதியம், பிரிம் உதவித் தொகை மற்றும் பலவற்றால் செய்யப்பட்டது. இது அவர்களின் முயற்சியில் அளிக்கப்படவில்லை, ஆனால், அரசாங்கத்தின் பணமாக இருந்தது”என்று அவர் கோலாலம்பூரில் இன்று சனிக்கிழமை தெரிவித்தார்.