கோலாலம்பூர்: நாட்டில் மலாய் மற்றும் முஸ்லிம்களின் நலனை மீட்டெடுக்க பிரதமர் மகாதீர் முகமட் நேர்மையாக முயன்றால், புதிய அரசாங்கத்தை அவர் அமைக்க வேண்டும் என்று அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் தெரிவித்தார்.
அப்புதிய அரசாங்கம் தேசிய முன்னணி, பாஸ், சபா மற்றும் சரவாக் மாநில கட்சிகளுடன் உருவாக்க முடியும் என்று முகமட் கூறினார்.
“மலாய்க்காரர்களும் முஸ்லிம்களும் ஒன்றுபட வேண்டும் என்ற துன் மகாதீர் அழைப்பு விடுத்துள்ளது தொடர்பில் நான் உடன்படுகிறேன். இருப்பினும், அது எவ்வாறான ஒன்றிணைப்பாக இருக்கும் என்பதே எனது கேள்வி” என்று அவர் தெரிவித்தார்.
முகமட் ஹசானின் கருத்துப்படி, நாட்டை மீட்டெடுப்பதில் அம்னோ பாஸ் கட்சிக்கு குறிப்பிடத்தக்க பங்கு வகுக்கப்பட வேண்டும் என்றார்.
“நாங்கள் வெறும் பயணிகளாக இருக்க விரும்பவில்லை. இதனால் இஸ்லாம், மலாய் சமூகம் மற்றும் பிற பழங்குடி மக்களின் நலன்கள் பாதிக்கும். துன் மகாதீர் மற்றும் பெர்சாத்து கட்சி, இந்த முக்கிய பெரு இணைப்பில் பங்கேற்பதை ஏற்றுக்கொள்வதில் அம்னோ மற்றும் பாஸ் கட்சிக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.