கோலாலம்பூர்: 2020–ஆம் ஆண்டு மலேசியாவுக்கு வருகை புரியும் ஆண்டாக அறிவித்ததை அடுத்து, 2020-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சீன மற்றும் இந்திய நாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கான வருகைபோது விசாவை (VoA) அரசாங்கம் மறுஆய்வு செய்ய வேண்டும் என்று மலேசிய பயணக் கழகத்தின் (மிட்டா) தலைவர் உசைடி உடானிஸ் கூறினார்.
விசா கட்டணம் 330 ரிங்கிட்டிலிருந்து 200 ரிங்கிட்டாகக் குறைக்கப்பட்டிருந்தாலும், அதன் செயல்பாடானது இரு நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்குச் சுமையாக இருக்கிறது என்று அவர் கூறினார். மலேசியாவிற்கு வருகை தருபவர்களில் பெரும்பான்மையானவர்கள் சீனர்கள் மற்றும் இந்திய நாட்டைச் சேர்ந்த சுற்றுப்பயணிகள் என்று அவர் குறிப்பிட்டார்.
“சுற்றுலாப் பயணிகளுக்கு வருகைபோது விசாவை இலவசமாக வழங்கப்படுவது சாத்தியமானது, ஏனென்றால் அவர்கள் மலேசியாவுக்கு வரும்போது கண்டிப்பாக செலவழிக்க வேண்டியிருக்கும். வருகைபோது விசாவின் அமலாக்கத்தை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய முடிந்தால், மலேசியாவிற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்,” என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.